Infotainment
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  Latest imagesLatest images  SearchSearch  RegisterRegister  Log inLog in  

 

 குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப்

Go down 
AuthorMessage
Selva
Admin
Admin
Selva


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 50
Location : Chennai, India

குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப் Empty
PostSubject: குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப்   குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப் EmptySun Nov 28, 2010 1:37 am


குருதி உடுத்தி வலம் வருகிறாள்
விடுதலை!
வீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....
ஒற்றைச் சூரியனாய்க் கீழ்வானில்
முகம் உயர்த்தி
வெற்றிச் சுடரொளியில் தமிழீழ
முகம் மலர்த்தி (குருதி உடுத்தி)

கொத்திச்செல்வேன் எனக்
கொக்கரிக்கும் ராஜபட்சி
நீள் சிறகு துணிக்க
நெடுவானில் வாள் உயர்த்தும்
தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,
காலவெளியில் ரத்தகானம்பாட (குருதி உடுத்தி)

துயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்ட
உயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விரியும் ஒரு தீயாய்,
வீரர் வீராங்கனையர் மார்பூட்டும்
ஒரு தாயாய் (குருதி உடுத்தி)

விரல் துடைக்கும்
நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,
விழிபொசுக்கும்
உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை
நுரைசிவக்கும் கடல் அலையே!
மறுகரைக்குச் சொல்க
நொறுங்காது தமிழீழம்
புலிப்படைதான் வெல்லும்! (குருதி உடுத்தி)




குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப் Signat11
Back to top Go down
https://tamec.forumotion.com
 
குருதி உடுத்தி விடுதலை - இன்குலாப்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: